இளம்பிறை | hilaal
இளம்பிறை | hilaal

@HilaalAlamTamil

6 Tweets Feb 19, 2023
மதுரைல 12வது படிக்கும் போது தமுக்கத்துல சித்திரை பொருட்காட்சி நடந்தது.
அங்க ஒரு பிரிவுல “சரியான விடை பொருத்துக”- அதாவது சரியான விடைகளை கண்டுபிடித்து வயர்களை இணைத்தால் விளக்கு எரியும்.
அப்ப ஒரு குடும்பம் வாரியாக வந்து அந்த வயர்களை randomஆக இணைத்துப் பார்த்தார்கள். விளக்கு எரியல
அப்ப அந்தக் குடும்பத் தலைவர் சொன்னார், “நமக்கு ராசி் இல்லை”ன்னு.
அடுத்து வந்த நான் சரியாக இணைத்ததும் “நீங்க ராசி தம்பி”-ன்னார். நான் எதுவும் பேசலை.
அதை வைத்த நோக்கமே வீணாகிவிட்டதை கண்டு மனசு சங்கடமா போச்சு.
ஒரு விசயம் புரியவில்லை எனில் மனம் ராசி, கடவுள் போன்றவற்றில் போகும்.
பிறகு நான் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்காதது என்னைக் குற்ற உணர்வில் ஆழ்த்தியது…
அவர்களுக்கு அது பற்றி தெரியாதது தவறில்லை. அதைத் தெரிந்தும் நான் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்காதது தான் தவறு.
அந்த தருணம் தான் பொது மக்களிடம் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் துளிர் விட்டது.
சரி அது எலக்ட்ரானிக்ஸ் & அப்போது (90s) எல்லா மக்களிடம் அதிக அறிமுகம் இல்லை.
ஆனால் ஒரு சிறு இடைவெளிக்குள் அதனை விட அதிக பருமனுள்ள எதுவும் நுழைய முடியாது என்ற அன்றாட அடிப்படை அறிவு கூட இல்லையா?
சமீபத்தில் ஒரு பெண்ணும் (தமிழகக்?) கோயிலில் குறுகிய நுழைவாயில் திணறி வெளியேறினார்…!
மக்களின் common sense ஏன் திடீரென்று (பக்தியால்) குருடாகிறது என்ற கேள்வி எழுகிறது.
இது எல்லாரிடமும் உண்டு…!
உங்கள் மத நம்பிக்கையாளரிடம் “நம் கடவுள் இந்த கல்லை வானிலிருந்து அனுப்பினார்” சொல்லுங்கள். நம்பிவிடுவார்.
அவரிடமே,“அந்த மதக்கடவுள் அந்தக் கல்லை வானிலிருந்து அவர்களுக்கு
அனுப்பினார்” என் சொல்லுங்கள். அவருடைய 6 அறிவும் வேலை செய்து நக்கலாக சிரிப்பார். Bias…
ஆக, இந்த இடைவெளியில் சிக்குவோம் என சாதாரணமாகவே தெரியும்…
ஆனால் பக்தி எனும் Bias blinds them.
நாம் தான் அடிக்கடி பேசி விழிப்புணர்வை கொண்டு செல்லவேண்டும்.
அவர்கள் பாவம் ஏமாற்றப்படுகிறார்கள்.

Loading suggestions...