திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

@kirupanandavari

5 Tweets 6 reads May 24, 2024
நெறிகளுக்கும் அப்பாற்பட்டுத் தனிநிலையில் விளங்குவதே சித்தாந்த சைவம். சித்தாந்த சைவம் எனப்படும் உயர்நெறியைக் கொள்வதற்கு முற்கூறப்பட்ட இருபத்துநான்கும் படிகளாக உள்ளன. ஏனைய சமயங்களைச் 'சோபான பக்ஷம்' என்பார் தாயுமான சுவாமிகள்.
"சைவமுதலா அளவில் சமயமும் வகுத்துமேற் சம்யம் கடந்த மோன
சமரசம் வகுத்தநீ யுன்னைநான் அணுகவும் தண்ணருள் வகுக்கவிலையோ”
என்று உருகுவார் தாயுமானவர்.
சைவம் என்பதற்குச் சிவத்தோடு சம்பந்தமுடையது என்று பொருள். சிவமும் குகமும் ஒன்றே. எனவே, ஷண்மதபதி என்பதற்கு அறு சமயங்களுக்கும தலைமையாக உள்ள சைவத்திற்குத் தலைவன் என்றும் ஷண்மதங்களுக்கும் தலைவன்
என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
“ஆறுசமயங்களெங்கும் ஆனந்தமாய் விளையாடி” எனப் பாடும் நம் சுவாமிகள் கந்தர்திருவாரத்தில் இவ்வாறு கூறுகிறார்.
"தவமே நிமிருட் சமயம் தனிலூஉம் அவமே பயின்மற் றதிலும் பொதுவாய் எவன்நின் றுளனோ அவனே எனையாள் சிவன்என் றறையும் சிவசண் முகனே"
மேலும் நால்வர் பெருமக்களின் திருவாக்குகள், அருணகிரியார், தாயுமானவர், பட்டினத்தார் முதலான அருளாளர்களின் திருவாக்குகள் அனைத்தும் அறுசமயங் களுக்கும் அறுமுகச் சிவத்திற்கும் உள்ள தொடர்பினை நன்கு விளக்குவனவ உள்ளன. இவர்களின் அருளுரைகளை ஏற்றுக்கொண்டு,
"அக்கினொடு முத்தினையும் அணிந்து
அங்கங்கே அறுசமயம் ஆகி நின்ற"
திக்காக விளங்கும் செவ்வேள் பரமனை வணங்குவோமாக.

Loading suggestions...