𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

6 Tweets Mar 11, 2023
UTS
( UNRESERVED TICKETING SYSTEM )
ரயில் முன்பதிவு செய்ய IRCTC செயலி உள்ளது. UNRESERVED டிக்கெட்டை பெறுவதற்கான செயலி தான் இந்த UTS. சென்னை (LOCAL) புறநகர் ரயில் மிகவும் ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால் அதில் டிக்கெட் பெறுவது ரொம்பவே சிரமம், பிக் அவர்சில் நீண்ட கியூ நிற்கும்.
தினசரி பயணம் செய்பவர்கள் பாஸ் எடுத்து கொள்வார்கள். ஆனால் அடிக்கடி வெளியூரில் இருந்து சென்னைக்கு செல்பவர்கள் பாடு திண்டாட்டம் தான் அதற்கு இது மிகவும் பயனுள்ள செயலி ஆகும் இது இந்திய ரயில்வேயில் உருவாக்கப்பட்டது. சென்னை போன்ற நகரங்களில் உள்ள லோக்கல் ட்ரெயினுக்கு மட்டுமல்ல
இந்தியாவில் உள்ள எந்த ட்ரெயின்கும் அன்ரிசர்வ்ட் டிக்கெட்டை இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதில் சில வழிமுறைகள் உண்டு. அந்த வழிமுறைகளை பின்பற்றி எப்படி டிக்கெட் புக் செய்வது என்று தெரிந்து கொள்வோம். முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி அந்த செயலியை உங்கள்
மொபைலில் பதிவிறக்கம் செய்யுங்கள். பின்னர் பக்கத்தில் உள்ள ஸ்டேஷன்ல்லிருந்து 5கி.மீ. சுற்றளவில் புக் செய்து கொள்ளலாம் (ஸ்டேஷனுக்குள் சென்றுவிட்டால் ஆப்பில் புக் செய்ய அனுமதிக்காது). டிக்கெட் புக்கிங் செய்த ஓரு மணி நேரத்துக்குள் பயணத்தை ஆரம்பித்து விடவேண்டும்.டிக்கெட் 3 மணி
நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்
இந்த ஆப்பில் கிரேடிட் கார்ட், டெபிட் கார்ட், நெட்பேங்கிங் மற்றும் வால்லெட்களின் மூலம் புக்கிங் செய்யலாம்.
நீங்கள் புக் செய்த டிக்கெட் 'Show Ticket' பகுதியில் இருக்கும். அதிலிருந்து பரிசோதகரிடம் காண்பித்து கொள்ளலாம்.
மேலும் பிளட்பாரம் டிக்கெட்,
சீசன் டிக்கெட் போன்றவையும் புக் செய்து கொள்ளலாம்
Download links -
Android: goo.gl
iOS: goo.gl

Loading suggestions...