நம்ம தாத்தா பெரும்பணக்காரர் நிறைய சொத்துக்கள் சேர்த்து வைத்திருந்தார் என்று வைத்துக்கொள்வோம். ஆனா அவர் இறந்த பிறகு அந்த சொத்துக்களை எல்லாம் நமக்கு தராமல் தங்கநாணயமாக மாற்றி எங்கோ ஒளித்து வைத்துவிட்டார். எங்கு என்று நமக்கு தெரியாது. அப்படின்னா நாம என்ன சொல்லுவோம்? 1/10
எங்க தாத்தா அந்த காலத்திலேயே பெரிய பணக்காரர் நிறைய சொத்து வைத்திருந்தார் என்று பெருமை பேசி நாம் வறுமையில் உழல்வோமா? அல்லது தாத்தாவை அசிங்கமா திட்டி சொத்தை அனுபவிக்க விடாம பண்ணிட்டானே படுபாவி எங்க ஒளிச்சு வச்சானோ தெர்லயே என்று புலம்புவோமா? 2/10
பிற்பாடு நாம் கஷ்டப்பட்டு உழைத்து தாத்தாவை விட அதிக காசு சேர்ந்தபின் இது என் உழைப்பில் வந்த காசு என்போமா அல்லது இதெல்லாம் ஒண்ணுமே இல்ல அந்த காலத்துலே என் தாத்தா காசு சேர்த்து வைத்திருந்தார் என்று நமக்கு தராத தாத்தாவை பெருமை பேசுவோமா? 3/10
நமக்கு தராமல் ஏழைகளுக்கு செய்த தாத்தாவையே நாம் மதிக்கமாட்டோம். பெத்த பிள்ளைக்கு தராம ஊருக்கு செய்யறானாம் என்று திட்டுவோம். இதில் யாருக்குமே தராமல் ஒளித்து வைத்த தாத்தாவை கொஞ்சவா செய்வோம்? கண்டிப்பாக மாட்டோம். 4/10
அப்படி இருக்கையில், முன்னோர்களுக்கு அவ்வளவு அறிவு இருந்ததாக பெருமைப்படும் நாம்... அந்த அறிவை எல்லாம் நமக்கு சொல்லி குடுத்து போனார்களா? என்று கேட்டோமா? 5/10
விமானத்தை அப்போதே கண்டுபிடித்து இருந்தால், ஒரு பள்ளிக்கூடம் கட்டி எல்லாருக்கும் புரியும்படி... code words, puzzle எல்லாம் போடாம தெளிவான மொழியில் step by step procedure நமக்கு சொல்லி குடுத்து இருக்க வேண்டாமா? 6/10
அப்படி இல்லாமல், நான் சங்கேத மொழியில் சூசகமா சொல்லுவேன் முடிஞ்சா படிச்சுக்கோ முடியாட்டி ஓடு என்றால் அது பெருமைக்குரிய விஷயமா? காசு தராத தாத்தாவை திட்டும் நாம், அறிவை நமக்கு கடத்தாத... detailed text book போட்டு எல்லாருக்கும் சொல்லி தராத... 7/10
முன்னோர்களை மட்டும் அவங்க அப்போவே பெரிய அறிவாளி என்று எதற்காக புளகாங்கிதம் கொள்ள வேண்டும்?
மொழிமாற்றம் அடையும் போதெல்லாம் புத்தகங்களை update செய்யாமல், தன்னுடைய அறிவை தனக்கு தெரிந்த மொழிகளில் எல்லாம் translate செய்யாமல், 8/10
மொழிமாற்றம் அடையும் போதெல்லாம் புத்தகங்களை update செய்யாமல், தன்னுடைய அறிவை தனக்கு தெரிந்த மொழிகளில் எல்லாம் translate செய்யாமல், 8/10
யாருக்கும் புரியாத original மொழியிலேயே maintain பண்ணி... யாரையும் படிக்க விடாம... பின்னர் யாரோ வெளிநாட்டவர் வந்து மொழிமாற்றம் செய்தால் அதையும் குறை சொல்லி, சரி உள் நாட்டுக்காரனே படிச்சு சொன்னால், அதையும் 'நீ எப்படி சொல்லலாம்' என்று மேல விழுந்து பிடுங்கி 9/10
நானும் படிக்க மாட்டேன், நீயும் படிக்க கூடாது, யாரும் படிக்க கூடாது, என்ன சொல்லி இருக்குன்னே யாருக்கும் தெரியாது, ஆனா முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை எல்லாம் முன்னாடியே சொல்லி வச்சு இருக்காங்க. 10/10
Loading suggestions...