Zakir Hussain
Zakir Hussain

@ZakirHu96073714

4 Tweets 6 reads Oct 18, 2022
நீங்களும் நானும்
உணவகம் தொடங்கிய பின்னர்,
அவாள் உயர்தர சைவ உணவகமாகிப் போனார்கள்.
நீங்களும் நானும்
படிக்கத் தொடங்கிய பின்னர்,
அவாள் உயர்தரக் கல்வி எனப் பேசினார்கள்.
நீங்களும் நானும்
அரசியல் பேசத் தொடங்கிய பின்னர்
அவாள் அரசியல் ஒரு சாக்கடை என்றார்கள்.
நீங்களும் நானும் ஊடகங்களில்
போய் அமர்ந்த போது, விபச்சார ஊடகம் என்றார்கள்.
இசையே இறைவடிவம் என்றவர்கள் நீங்களும் நானும் இசைக்கும் போது டப்பாங்குத்து எல்லாம் இசையா என்றார்கள்.
நீங்களும் நானும் படம் இயக்கியபோது, சினிமாவே கெட்டு போச்சி என முடித்து கொண்டார்கள்.
நீங்களும் நானும் மருத்துவம் படிக்க சென்றபோது,
இவர்கள் எல்லாம் மருத்துவம் படிச்சி என்னாக போகிறது என்றார்கள்.
இது எதுவுமே புரியாமல் சாதி, மதம், இனமென சண்டையிடும்போது இவன்களுக்கு இதே வேலையா போச்சி, எல்லாத்தையும் நாமளே வச்சிப்போம் என மறுபடியும் மனுசட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
இதில் நீங்களும் நானும் நாமும் யார்? அவாள்
யார்?
புரிந்து கொண்டால் உங்கள் குழந்தைக்கு
ஒருநல்ல எதிர்கால சொத்தை விட்டு செல்வீர்கள்.
இல்லையேல், உங்கள் முப்பாட்டனின் இடுப்பு துண்டைஅவர்களுக்கு உறுதிபடுத்திவிட்டு செல்கிறீர்கள்.

Loading suggestions...