இளம்பிறை | hilaal
இளம்பிறை | hilaal

@HilaalAlamTamil

4 Tweets 1 reads Feb 19, 2023
Kano Model
3 வகையான வாடிக்கையாளர் தேவைகள் உள்ளன.
1. அடிப்படை
2. எதிர்பார்ப்பு
3. ஆச்சர்யம்
இதில் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்வதில் அந்த பொருளின்/வணிகத்தின்/சேவையின் வெற்றி இருப்பதில்லை.
நீங்கள் திறன்பேசி வாங்கும் போது, “இதில் display இருக்குமா?” என்று கேட்பதில்லை. அல்லவா?
மாறாக, மற்ற இரு தேவைகளை பூர்த்தி செய்வதில் தான் அதன் வெற்றி / தோல்விகள் அடங்கியுள்ளன.
ஆனால் அந்த இரு தேவைகளும் ஒன்றிற்கொன்று எதிர்மாறானவை.
எதிர்பார்த்த தேவைகளை (expected requirements) எவ்வளவு தான் பூர்த்தி செய்தாலும் வாடிக்கையாளர்கள் அது பற்றி அவ்வளவாக பேசுவதில்லை. அவை latent.
ஆனால் அதனை பூர்த்தி செய்வதில் சிறு குறை வைத்தாலும் முடிஞ்…!
ஆனால் ஆச்சர்யத் தேவைகள் (exciting) அவ்வாறல்ல. அதனை பூர்த்தி செய்யாவிட்டால் வாடிக்கையாளர்கள் அவ்வளவாக கண்டுகொள்ளமாட்டார்கள்.
ஆனால் அவற்றில் சிறிதளவு பூர்த்தி செய்தாலே போதும் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள்
இந்த 2 தேவைகளை
வைத்து தான் சேவைகளின் அல்லது பொருட்களின் வடிவமைப்புகள் இருக்கும்.
ஆனால் அவற்றின் தன்மைகள் நமக்கு முன்பின் தெரியாததால் வடிவமைப்பு விபத்துகள் நடைபெறுகிறன.
(அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் விபத்துகள் / குறைபாடுகள் நடைபெறுவது திறன் சார்ந்தவை. அது வேறு)
youtu.be

Loading suggestions...