இளம்பிறை | hilaal
இளம்பிறை | hilaal

@HilaalAlamTamil

8 Tweets 1 reads Feb 19, 2023
மேக்னஸ் விளைவு
Roberto Carlos தான் முதலில் இதனை கால்பந்து ஆட்டத்தில் செய்து காண்பித்தார்.
அதற்கு முன்பாக டென்னிசு & கிரிக்கெட்டில் (swing bowling) மட்டுமே இந்த விளைவு காண்பிக்கப்பட்டது.
ஏதோ ஒரு திசையில் உதைத்தால் எப்படி பந்து வளைந்து சென்று சரியாக கோல் கம்பத்திற்குள் விழுகிறது
ஒரு தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை கீழே உள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதைப் போல பிடித்துக் கொண்டு அதன் மேற்பரப்பில் வேகமாக ஊதுங்கள்…
அந்தத் தாள் மெதுவாக எழும்பும். இதற்கு காரணம் காற்றழுத்த வேறுபாடு.
நீங்கள் வேகமாக மேற்பரப்பில் ஊதுவதால் அங்கு காற்றழுத்தம் குறைந்துவிடுகிறது.
கீழ்பக்கம் அவ்வளவாக எந்த காற்றோட்டமும் இல்லாததால் அங்கு அதிகக் காற்றழுத்தம் உள்ளது.
விளைவு?
அதிக அழுத்தம் உள்ள கீழ்பகுதியில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள மேற்பரப்பை நோக்கித் தாளைத் தள்ளுகிறது.
இப்படித் தான் வானூர்தியும் பறக்கிறது.
தாளிற்குப் பதில் இருபுறமும் இறக்கைகள்
சரி இப்போது கால்பந்திற்கு வருவோம்.
இப்போ… நேராக பந்தை உதைத்தால் நியூட்டனின் முதல்விதிப்படி உதைக்கும் திசையிலேயே பந்து நேராகப் போகும். அது எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் பந்தை ஒரு (படத்தில் உள்ளது-வலது) பக்கமாக உதைத்தால், பந்து சுழன்று கொண்டே பறக்கும்.
அப்போது தான் அந்த விளைவு
தோன்றுகிறது. கவனிங்க!
பந்து சுழன்று கொண்டே பறக்கும்போது ஒரு பக்கம் காற்றின் திசையிலும் அதன் மறுபுறம் காற்றுக்கு எதிர்புறமும் இருக்கும்.
காற்றின் திசையில் உள்ள பகுதியில் பிரச்சனையும் இல்லை.
மறுபக்கம் பந்தின் பகுதி பயணிக்கும் திசை காற்றுக்கு எதிரெதிரே உள்ளதால் காற்றின் அழுத்தம்
அதிகமாகும்.
அதாவது சுழலாமல் நேராகச் சென்றால் இருபுறமும் சம அழுத்தம் (இடதுபுற பந்து).
சுழன்று கொண்டே சென்றால் காற்று செல்லும் திசையில் உள்ள பகுதி (அதிகப் பரப்பில்) கடப்பதால் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது.
காற்றின் எதிர்புறம் செல்லும் பகுதியில் அதிக அழுத்தம் உருவாகிறது. அது
குறைந்த அழுத்தப்பகுதியை நோக்கி பந்தை தள்ளுகிறது. குறைவழுத்தப் பகுதியில் காற்றின் பயணம் அதிகப் பரப்பில் உள்ளது.
அப்படித்தான் Roberto Carlos பந்தை கோல் கம்பத்தற்குள் அனுப்பினார். அந்த goal keeper -ஆல் கூட அது எங்கு வந்து விழும் என்பதை (அப்போது) கணிக்க இயலவில்லை.
படம் @Jousefm2
உயரத்திலிருந்து சுழன்று கொண்டே விழும் பந்தில் - மேக்னஸ் விளைவு
👇🏾

Loading suggestions...