பாக்டீரியா
பாக்டீரியா

@Bacteria_Offl

5 Tweets 2 reads Apr 20, 2023
திமிரை அடக்கியே தீர வேண்டும்!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சென்னை, கடற்கரைப் பகுதியில் தலைவர் கலைஞரின் பேனாவிற்குச் சிலை வைப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்துள்ளது. அதில் தன் கட்சியின் கருத்தை உரைக்க, நாம் தமிழர் கட்சியின் சீமான் வந்துள்ளார்.
அதில் எந்த ஒரு கருத்தையும் சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், "நீ பேனா வைத்தால் நானே அதை உடைப்பேன்" என்று அவர் பொதுவெளியில் பேசியுள்ளது வெறும் கருத்தாகாது. அது வன்முறையின் வெளிப்பாடு.
அது வெறும் கருத்துதான் என்றால், இன்னொருவர் "நீ பேனா சிலையை உடைத்தால், நான் உன் கையை வெட்டுவேன்" என்று சொல்லக்கூடும். அதுவும் வெறும் கருத்துதான் என்று விட்டு விடலாமா..?
உடனே, "பாருங்கள் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது" என்பார் அண்ணாமலை. "அதனால் ஆட்சியைக் கலைக்க வேண்டும்" என்பார் சு.சாமி.
நமக்குத் தெரியும், இவர்கள் அனைவரும் ஒரே நாடகக் கோஷ்டியின் வெவ்வேறு பாத்திரங்கள்..!
பாஜக பின்னால் இருக்கும் துணிச்சலில்தான், சீமான் பேச்சில் இவ்வளவு திமிர் வெளிப்படுகிறது.
திமிரை அடக்கியே தீர வேண்டும்.
அன்புடன்:
சுப.வீரபாண்டியன் (@Suba_Vee)
திராவிட இயக்கத் தமிழர் பேரவை

Loading suggestions...