Keerthana Ram
Keerthana Ram

@keerthanaram142

5 Tweets 2 reads Mar 13, 2023
#தமிழ்நாட்டு_கலவரங்கள்_வெகுஜன_ஊடகம்
#மொழிப்போர்_1965
மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது .
மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப் பட்டனர் .
அப்பொழுது முதல்வர் #பக்தவச்சலம் .
சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி #கக்கன் இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு.
இது சாதி போராட்டம் இல்லை.
#விவசாயிகள்போராட்டம்_1978
மின் கட்டண உயர்வை எதிர்த்து 77 ல் ஆரம்பித்த விவசாயிகள் போராட்டத்தின் தொடர்ச்சியில் 40 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
#எம்ஜிஆர் முதல்வர்
#வன்னியர்போராட்டம்_1987
இந்தித் திணிப்பு போராட்டத்திற்கு பின் நடந்த மிகப் பெரிய போராட்டம் வன்னியர் சங்கம் 1987 ம் ஆண்டு முன்னெடுத்த தனி இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம்..அப்பொழுது முதல்வர் #MGR
18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் .
70 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
#மாஞ்சோலைபோராட்டம்_1999
ஊதிய உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தில் விஷமிகள் கல் வீசி (#அந்தமுதல்கல் என்று ஆவணப்படம் உள்ளது) தாக்க , போலிஸ் தடியடி நடத்த பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 17 தொழிலாளிகள் நீரில் மூழ்கி இறந்தனர்
எதிர்கட்சித் தலைவராக இருந்த சோ. பாலகிருஷ்ணன், போலீஸ் கற்களை கொண்டு தொழிலாளர்கள் மீது தாக்குதல்
நடத்தியதாக குற்றம் சாட்டினார். தோட்ட வேலைக்கு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் போகவில்லை.
பல சாதி, மதத்தினர் கலந்து கொண்டனர். இறந்தவர்களில் எல்லா சாதியினர் உண்டு. சாதி பிரச்சனை இல்லை

Loading suggestions...