𝓢𝓪𝓷𝓴𝓪𝓻
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻

@CodeNDrive

12 Tweets 2 reads Mar 14, 2023
4 years old fb post #FBMemoriesPost
சாதி அரசியலும் காமராஜரும் கலைஞரும்
நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் தேர்தலில் மாறி மாறி ‘Dravidian majors’ சாதிக் கட்சிகளோடு கூட்டணி வைத்து அரசியலை சாதிமயமாக்கி விட்டார்களே, அதுபற்றிய உங்கள் கருத்தென்ன எனக் கேட்டார்.
1/
நான் அவரிடம் தற்போதைய சாதிக் கட்சிகளில் பிரதானமானதும், நீண்ட அரசியல் வரலாறும் கொண்ட கட்சி எது என்றேன். அவர் கொஞ்சம் யோசிக்க, நான் 'பா ம க' தானே என்றேன். அவரும் 'பா ம க' தானென ஒப்புக் கொண்டார்.
இந்த ஒப்புதலோடு அவருக்கு , தமிழக அரசியலில் சாதி குறித்த விரிவான பதிலை சொன்னேன்.
2/
1. முதன் முதலாக 1952 ஆம் ஆண்டு அமைந்த ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவை ஒரு மைனாரிட்டி அரசு. மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்றதனால், காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை.
3/
2. காங்கிரஸ் தலைவர் காமராஜர் களமிறங்கி , திமுக வுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ( திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ஆதரிப்பதாக ஒப்பந்தம் ), அதன் ஆதரவோடு வென்ற மாணிக்கவேலர் தலைமையிலான காமன்வீல் பார்ட்டியை ( வன்னியர் கட்சிதான்) மடக்கி , அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து ஆட்சி
4/
அமைக்க உதவினார் .
3. ராஜாஜி ,குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு திக , திமுக போராட்டத்தின் விளைவாக பதவி விலக நேர்ந்த போது , 1954ல் காமராஜர் முதல்வர் ஆனார். ஆனால் இப்போதும் சிக்கல். மீண்டும் 1953 ல் ஆந்திர மாநில பிரிவினையால் பெரும்பான்மை பறி போனது. இப்போது காமராஜர் வன்னியர்களின்
5/
இன்னொரு கட்சியான ராமசாமி படையாச்சி அவர்களின் உழவர் உழைப்பாளர் கட்சியை வளைத்து , படையாச்சியாருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார். வேடிக்கை இந்த அணியும் திமுக வோடு ஒப்பந்தம் போட்டு அவர்கள் ஆதரவோடு வென்றவர்கள்தான். ஆக முதன் முதலாக சாதிக்கட்சியோடு ஆட்சியையே அமைத்தது காமராஜர்
6/
தலைமையிலான காங்கிரஸ்தான் என்றேன்.
ஆக அமைச்சர் பதவி ஆசை காட்டி அணி தாவச் செய்து சாதிக்கட்சியை ஆதரித்தவர் கர்மவீர ரே. அறமான அரசியலின் அரிச்சுவடி.
4. அடுத்து தமிழ்நாட்டில் சாதி பெரும்பான்மை பார்த்து நாகர்கோவிலில் களம் கண்டதும் காமராஜர்தான். ஆம், விருதுநகர் தேர்தலில் தோற்ற
7/
காமராஜர் மீண்டும் டில்லி அரசியல் செய்ய தேர்வு செய்தது நாடார்கள் பெரும்பான்மை கொண்ட நாகர்கோவில் தொகுதியை.
5. தெற்கே முத்துராமலிங்கத்தேவர் சாதி அரசியல் அவரது மரணத்தால் முடிவுக்கு வந்தபோது அந்த வெற்றிடத்தை தனதாக்கி முக்குலத்தோர் சாதி அரசியல் செய்தது இன்னொரு புனித ஆத்மா எம்ஜிஆர்
8/
இதில் ஒரு ஆச்சர்யம் திமுக வில் இருந்த போதே தேவரோடு நெருக்கமாக இருந்தவர் எம்ஜிஆர் என்பது. 1962 ஆம் ஆண்டு தேனி தொகுதிக்கான போட்டியில் எஸ்எஸ்ஆருக்காக அவரை விட்டுக் கொடுக்க மத்தியஸ்தம் செய்தார் முத்துராமலிங்கத்தேவர் என்ற தகவலும் உள்ளது.
9/
6. எனவே சாதி அரசியலை ஒருபோதும் ஆதரிக்காத தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக , எம்ஜிஆர் , அவரைத் தொடர்ந்த ஜெ / சசி சாதிய அரசியலால் சாதியத்தை சகிக்க வேண்டிய நிர்பந்தந்திற்கு ஆளாக்கப்பட்டது என்பதே உண்மை.
7. காமராஜ் , எம்ஜிஆர் எனும் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்களின் பொய்மையும்,
10/
பார்ப்பனிய ஊடக வியாதிகளின் இடைவிடாத நச்சு பரப்புரைகளுமே பொத்தாம் பொதுவாக ‘Dravidian major ‘ களை சாதிய அரசியல் ஆதரவு சக்திகளாக ஆக்கி விட்டிருக்கிறது.
8. திமுக அன்றும் இன்றும் மத, மொழி , சாதி சிறுபான்மையினருக்கான கட்சி என்பதே உண்மை.
11/
உண்மையை உரத்துச் சொல்வதில் தயக்கமில்லை.
~VMS Subagunarajan
12/12

Loading suggestions...