M.SivaRajan
M.SivaRajan

@MSivaRajan7

9 Tweets 30 reads Mar 29, 2023
#சிங்கீஸ்வரர்
பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்!
ஒரே கோயிலில் பல அதிசயங்களைக் காண வேண்டும் என்று விருப்பினால் நீங்கள் இந்த ஆலயத்துக்குத் தான் வரவேண்டும்.
நான்கு யுகங்களாகச் சிறந்து விளங்கும் இந்த மப்பேடு சிங்கீஸ்வரர்.
பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த திருமால், இந்தத் தலத்துக்கு வந்தே மீண்டும் சுயரூபம் கொண்டாராம்.
அதனால் இந்த ஊர் மெய்ப்பேடு என்று மாறி (மெய் - உண்மை, பேடு - வடிவம்). பிறகு மப்பேடு’ என்று மருவியதாகச் செல்வார்கள்.
வாய் பேச முடியாத பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து குணமானதால், இது மேய்ப்பேடு’ என்று பெயர் பெற்றதாகவும் சொல்வார்கள்.
அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இந்தத் தலத்துக்கு வந்து நீக்கிக் கொள்ளலாம் என்கிறது புராணம்.
ஈசனோடு இங்கு வந்த சக்தி, நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்று திருநாமம் கொண்டாளாம்.
சுவாமி சந்நிதியின் வலது புறத்தில், சதுரமான கருவறையில் நின்ற கோலத்தில் - கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகிறாள், புஷ்பகுஜாம்பாள்.
இந்த அம்பிகையை வணங்கி வேண்டிக்கொண்டால், பேச்சில் வல்லமை தருவாள்.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆலயம் மூல நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலமாக உள்ளது.
கலைகளின் தேவியான கலைமகளுக்கும், ஆற்றலில் சிறந்தவரான அனுமனுக்கும் உரிய நட்சத்திரம் மூலம்.
இந்த நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்க, ஆற்றலும் கலையும் பெருகும் என்கிறார்கள் பெரியோர்கள்.
இங்குள்ள வீரபாலீஸ்வரர் காரியத் தடைகளை விலக்குபவர்.
இவரின் சந்நிதிக்கு முன்பு நின்று வீணை இசைத்து அனுமன், ஈசனின் அருளைப் பெற்றதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது.
பிரதோஷ காலத்தில், நந்தி மண்டபத்தின் முன்பாக உள்ள `நவ வியாகரணக் கல்’ என்ற சிறிய கருங்கல்லின் மீது ஏறி நின்று,
ஒருசேர நந்தியையும் ஈசனையும் வழிபட்டால், நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை சோம வாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.
பூந்தமல்லி - பேரம்பாக்கம் மார்க்கத்தில், பூந்தமல்லியிலிருந்து சுமார்
20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மப்பேடு.
#சிங்கீஸ்வரர்
#சிங்கீஸ்வர_சுவாமி
#ஓம்_சிவாய_நமஹா

Loading suggestions...