VISWANATHAN
VISWANATHAN

@vis76al

10 Tweets 467 reads Apr 17, 2023
#நிலஉச்சவரம்பு_சட்டம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட காலம் அது. தமிழகத்தில் இருபோக விவசாய நிலம், ஒருபோக விவசாய நிலம் ,மானாவாரி, தரிசு என ஒரு குடும்பத்துக்கு (ஒரு குடும்பம் என்பது ஐந்து நபர்கள்) 60 ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம்.
அதிகப்படியான நிலங்களை அரசே எடுத்து அதனை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்து வழங்கும். ஆனால் தமிழகத்தில் நிலம் அதிகமாக வைத்திருந்தவர்கள் அதிகம் உள்ள தனது நிலங்களை அரசாங்கத்திற்கு கொடுத்ததாக எந்த ஆவணமும் இல்லை .
அதிக நிலம் வைத்திருந்தவர்கள் நிலமற்ற மற்றும் குறைந்த நிலமுடைய அவர்களது
உறவினர்களுக்கும்,சொந்த சாதியினருக்கும் வேண்டப்பட்டவர்களுக்கும், கோயில் பெயரிலும் எழுதி வைத்துவிட்டனர் .கோவில் பெயரில் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற விலக்கு அந்த சட்டத்தில் இருந்தது .
இதில் என்ன ட்விஸ்ட் என்றால் ...60 ஏக்கருக்கு அதிகம் உள்ள நிலத்தை கோவில்
பெயரில் எழுதி வைத்துவிட்டு மீண்டும் அந்த நிலத்தை அவர்களே பயன்படுத்திக்கொண்டனர்.
அப்படி நில உச்சவரம்பு சட்டத்தை எதிர்த்து தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தனது சொத்துகளை பிரித்தார். .அவர் தனது சொத்துக்களை 17 பிரிவாகப் பிரித்து (சரிபாகமாக இல்லை) யாருக்கெல்லாம்
எழுதிக் கொடுத்தார் என்கிற விவரம் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள புத்தகத்தில் உள்ளது .வாய்ப்புள்ளோர் படித்துக் கொள்ளலாம் .
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 17 கிராமங்களை எழுதி வைத்தாரெனவும் ...ஏழை எளிய மக்களுக்கு தனது சொத்து பத்துக்களை எழுதி
வைத்தார் எனவும் சீமான் போன்ற தற்குறிகளால் சொல்லப்பட்டு வருகிறதே அதைப் பற்றி பார்ப்போம்.
நில உச்சவரம்பு சட்டத்தின் காரணமாக முத்துராமலிங்க தேவர் அவர்களின் சொத்து மொத்தம் 17 பங்காக பிரிக்கப்பட்டு அவருக்கு ஒரு பங்கு போக மீதி 16 பங்கில் பள்ளர் இனத்தைச் சேர்ந்த இரண்டு பேர்களுக்கு
தலா நாலு ஏக்கர் மானாவாரி,இரண்டு கோட்டை விதைப்பாடு கிணற்று பாசன நிலம்(இரண்டு கோட்டை விதைப்பாடு என்பது 3.4 ஏக்கர் ) மட்டுமே வழங்கப்பட்டது .
அந்த நிலத்தையும் கூட பள்ளர் இனமக்கள் தேவர் அறக்கட்டளைக்கு அவர்கள் திருப்பி கேட்டதன் பேரில் ஒரு பைசா கூட வாங்காமல் எழுதிக் கொடுத்து விட்டனர்.
மீதியுள்ள 14 பங்கும் முத்துராமலிங்க தேவர் அவர்கள் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உறவுக்காரர்களுக்கும் என 14 நபர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அந்த 14 பேரில் முத்துராமலிங்கத் தேவரின் நெருங்கிய உறவினர்கள் நான்கு பேர் மட்டுமே நிலத்தை திருப்பி கொடுக்கவில்லை. மீதி உள்ள
10 பேரும் நிலத்தை திருப்பி கொடுத்து விட்டார்கள்
கிடைத்த தகவலின் அடிப்படையில் இது பதிவிடப்பட்டது.
இனி சீமானுக்கும் சீமானின் தற்குறி தம்பிகளுக்கும்
பெரியார் தனது சொத்துக்களை
யாருக்கும் தரவில்லை .
அனைத்தும் கல்வி நிறுவனங்களாகவும் அறக்கட்டளைகளாகவுமே மாறி நிற்கின்றன
நம்ம கேள்வி ஒன்றுதான்..எந்த தலைவரைப்பற்றி பேச சீமான் மேடை ஏறினானோ, அந்தத்தலைவரை பற்றி பேசாமல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களையும் பெரியாரையும் ஒப்பிட்டு பேசவேண்டிய நோக்கம் என்ன..?
ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒற்றை விசச்செடி சீமான்

Loading suggestions...