கொஞ்சம் உடைத்தே பேசுகிறேன்... 2010-13 காலமாக இருக்க வேண்டும் 2g, அன்னா ஹசாரே, நிர்பயா வழக்கு, சில ஆண்டுகளுக்கு முந்தைய மும்பை தீவிரவாதம் என ஏகப்பட்ட விசயங்களில் திமுக காங்கிரஸிற்கு எதிராக பயங்கரமாக பொங்கியிருக்கிறேன்.
1/n
கோபத்தில் அந்தத் தேர்தலில் வாக்களிக்காதது மட்டுமல்ல வாக்களித்தவர்களிடைய திமுக காங்கிரஸிற்கு எதிரான மனநிலையை நன்றாக பரப்பியிருக்கிறேன்.
அன்னாஹசாரேவை ஆதரித்து அலுவலகத்திற்கு கருப்புச்சட்டை அணிந்து (நண்பர்களையும் கட்டாயப்படுத்தி) காங்கிரஸ் வெறுப்பை இன்னும் பரவலாக்கியிருக்கிறேன்
2/n
என்னுடைய இந்த கோபங்கள் முட்டாள்த்தனமானது என்றாலும் உண்மையானது - எந்த ஒரு கட்சியையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் மனதில் இருந்த கோபத்தை அப்படியே வெளியே கொட்டியிருந்தேன். அதனால் தான் அது முட்டாள்த்தனமானது.
3/n
இந்த பத்தாண்டுகளில் நான் மேலே சொன்ன சம்பவங்களை விட பல மடங்கு அசிங்கமானதும் வக்கிரமானதும் ஏகப்பட்டவை நடந்துவிட்டன. அக்லக் எனும் முதியவர் கறி வைத்திருந்த ஒரே பாவத்திற்காக சொந்த ஊர் மக்களால் அடித்தே கொல்லப்பட்டார். மும்பை தீவிரவாதத்தோடு எந்த வகையில் குறைந்தது இது?
4/n
ரோஹித் வெமுலாவும், அனிதாவும், ஃபாத்திமாவும் அவர்கள் ஆசைப்பட்ட கல்வியாலேயே தற்கொலைக்குத் தள்ளப் பட்டனர். 2ஜி யில் உண்மையிலேயே கொள்ளை போயிருந்தால் கூட நம் பிள்ளைகளை நாம் இழந்திருக்க மாட்டோம்!
5/n
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கொரோனாவில் உள்ளூர் மக்களே அகதியைவிட அசிங்கமாய் நடத்தப்பட்டனர் - கேட்டால் வெளிநாட்டில் பதுக்கியிருக்கிற பணத்தை எடுத்து ஆளுக்கு பதினைந்து லட்சம் தருகிறேன் என்று படம் ஓட்டினார்கள்.
6/n
இதோ மணிப்பூர் மாநிலமே காட்டுத்தீயைவிட மோசமாக எரிகிறது. இன்று ஒரு பெண்ணை பட்டப் பகலில் ஊராக சேர்ந்து கேமராவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டே அடிக்கிறார்கள் - நிர்பயா உயிரோடு இருந்திருந்தால் நம் முகத்தில் துப்பியிருப்பாள்!
7/n
இன்னும் எவ்வளவை எழுத!?! ஆனால் அன்று நான் காங்கிரஸ் திமுக விற்கு எதிராக பொங்கிய பொழுது என்னை ஏற்றிவிட்டு ரசித்த நண்பர்களை இன்று காணவில்லை. அவர்களுக்கு ஏனோ இந்த ராம ராஜ்யம் தான் பிடித்திருக்கிறது. சாகிறது அனிதாவும் அக்லக்கும் தான் என்பதாலோ என்னவோ!
8/n
நான் கொஞ்சம் திருந்திவிட்டேன்! பாஜக வைப் போன்ற அயோக்கியத்தனமான ஒரு கட்சி இந்த உலகத்திலேயே இல்லை. நடக்கப் போகிற கொடுமைகளை தடுப்பதற்காகவாவது பாஜக வை தோற்கடிக்க உழைப்பேன்!
இந்த நேரத்தில் திமுக காங்கிரஸை குறை கூறிக் கொண்டு வருபவனை மட்டும் பத்தடி முன்பே நிறுத்தி விடுங்கள்!
n/n