15 Tweets 23 reads Sep 14, 2023
முடிவுக்கு வந்த இந்திய பின்
லேடன் வாழ்க்கை-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எந்த நேரத்திலும் இந்தியாவோடு இணையலாம் என்பதே இப்பொழுது அங்கு இருக்கும் நிலைமை.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல பாகிஸ்தான் எதிர்ப்பு தலைவர்கள் இப்பொழுது இந்தியாவின் ரா அமைப்பின்...
கட்டளைப்படியே நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இப்பொழுது அங்கு நடைபெற்று வருகின்ற பாகிஸ் தான் எதிர்ப்பு போராட்டங்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற ஒரு துல்லியமான என்கவுண்டரை வைத்து..
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் ரா அமைப்பை சார்ந்தவர்கள் மிக அதிகமாக ஊடுறுவி இருக்கிறார்கள் என்று
பாகிஸ்தான் மீடியாக்கள் அலறி கொண்டு இருக்கின்றன.
இதற்கு காரணமாக பாகிஸ்தான் மீடியாக்கள் கூறுவது கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்..
உள்ள புகழ் பெற்ற அல் குதூஸ் மசூதியில் நடை பெற்ற என்கவுண்டரைத்தான்.
பாரதத்தினால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத கூட்டத்தின் தளபதியும், அபு காசிம் காஷ்மீரி என்கிற ரியாஸ் அகமது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல் கோட்டில் உள்ள அல்-குதுஸ் என்கிற மசூதிக்குள்..
வைத்து வெள்ளிக்கிழமை சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்.
இந்த ரியாஸ் ஜமாத்-இ-தாவா என்கிற அமைப்பின் தலைவராக இருக்கிறான் இவன் இந்தியாவில் உள்ள ஜம்மு பகுதியில் பிறந்தவன் .
1999 ல் இந்தியாவில் இருந்து விலகி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் செட்டில் ஆகி விட்டான்.
ஏகப்பட்ட காஷ்மீரிகளை பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு ஆயுத பயிற்சியை அளித்து ஜிகாதிகளாக மாற்றி அவர்களை வைத்து ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்களை நடத்துவது தான் அபு காசிமின் வேலையாகும்.
அபு காசிம் கடந்த ஜனவரி மாதம்..
ஜம்முவில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் தாங்கிரியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் எட்டு இந்துக்களை சுட்டு கொன்ற சம்பவத்திற்கு மாஸ்டர் மைன்டாக இருந்தவன்.
காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்களை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு இந்துக்கள் பெருமளவில் உள்ள ஜம்முவில் உள்ள இந்துக்களை குறி வைத்து..
அங்குள்ள இஸ்லாமியர்களை மத ரீதியாக தூண்டி விட் டு தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுகிறது.
இதில் முக்கியமானது 2023 ஜனவரி 1 மற்றும் 2 தாங்கிரியில் நடைபெற்ற தாக்குதல்கள் இதில் 9 இந்துக்கள் கொல்லப்ப்பட்டார்கள். அப்பொழுதே அவனை கொல்ல ரா அமைப்பு
உறுதி கொண்டது.
ஆனால் பின் லேடன் மாதிரி சகலவிதமான பாதுகாப்புகளுடன் பாகிஸ்தான் அரசு இந்த அபு காசிமை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாயும் பூஞ்ச் ஆற்றின் கரையின் ஒரத்தில் கோட்லி என்கிற இடத்தில் தங்க வைத்து இருந்தது.
இந்த பூஞ்ச் மாவட்டத்தின் தலைநகரான ராவல்கோட்டில் உள்ள அல்குதூஸ் மசூதிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுவதற்கு அபுகாசிம் வருவது வழக்கம்.
அபுகாசிம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வியாழக்கிழமை இரவே வந்து அல்குதுஸ் மசூதியில் தங்கி இருந்து மறுநாள் வெள்ளிக்கிழமை..
தொழுகை நடத்தி விட்டு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தான்.
கடந்த வாரமும் வியாழக்கிழமையே வந்து இரவில் தங்கிவிட்டு வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் பொழுது தான் உடன்
தொழுகையில் இருந்த இருவர் அபு காசிமை சுட்டு கொன்று விட்டு தப்பியோடி இருக்கிறார்கள்.
அபுகாசிமை பாகிஸ்தான் மீடியாக்கள் இந்தியாவின் பின் லேடன் என்றே அழைக்கும். பின் லேடன் மாதிரியே இவர்
அனைத்து இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்.
லஷ்கர் இ தொய்பாவின் நிதி விவகாரங்களை அபு காசிம்
தான் கவனித்து வந்தான். இதனால் பாகிஸ்தான்..
ஆக்கிர மிப்பு காஷ்மீரில் இருந்து அடிக்கடி பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ள முரிட்கேவில் உள்ள லஷ்கர் இதொய்பாவின் தலைமையகத்திற்கு சென்று வந்து கொண்டு இருப்பான்.
சமீபத்தில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல் கோட்டிற்கு வந்து இருக்கிறான் வந்த இடத்தில் தொழுகைக்கு மசூதிக்கு..
செல்ல அங்கேயே வைத்து அவனை போட்டு தள்ளி விட்டார்கள்.
பாகிஸ்தான் ஊடகங்கள் அபுகாசிமை ஸ்கெட்ச் போட்டு மசூதியில் வைத்து கொன்றது இந்தியாவின் ரா தான் என்று ஒப்பாரி வைத்து கொண்டு இருக்கின்றன. அபுகாசிமை கொன்றது ரா தான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஏனென்றால் இப்பொழுது ஏகப்பட்ட ரா உளவாளிகள் மையம் கொண்டு இருக்கும் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான். இது தான் இப்பொழுது ரா வின் டார்கெட்டாக இருக்கிறது. இப்போதைக்கு
மோடியின் டார்கெட்டும் இது
தான்.
Courtesy: 🙏🙏Vijayakumar Arunagiri.

Loading suggestions...