விமலிசம்
விமலிசம்

@withkaran

15 Tweets 10 reads Oct 30, 2023
இந்த தெருநாய்கள் எண்ணிக்கை நாம நினைக்கிறத விட பல மடங்கு வேகமா பெருகிட்டு வருது. சென்னைல மட்டுமே ஒரு லட்சம் தெருநாய்கள் இருக்கலாம்னு சொல்றாங்க.
இந்த விஷயத்துல நாம ஆஸ்திரேலியாட்ட இருந்து பாடம் கத்துக்கனும். மத்த நாடுகள்லாம் அடுத்த நாடுகளோட சண்டை போட்டா ஆஸ்திரேலியா மட்டும் தன் நாட்டு விலங்குகளோடயே கடந்த இரண்டு நூற்றாண்டா சண்டை போட்டுட்டு இருக்காங்க.அப்படி ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் பெரிய தலைவலியா இருக்கிறது ஒரு அழகான வீட்டு விலங்கு அப்படினு நாம நினைச்சுட்டு இருக்குற முயல். இந்த முயல் ஆஸ்திரேலியாவிலே பூர்விகமா இல்லாம வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒன்னு.இன்னைக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள உணவுப்பொருட்கள தின்னு நஷ்டத்த ஏற்படுத்திட்டு இருக்கு.பல நோய்களையும் கொடுத்துருக்கு
இந்த விஷயத்துல நாம ஆஸ்திரேலியாட்ட இருந்து பாடம் கத்துக்கனும். மத்த நாடுகள்லாம் அடுத்த நாடுகளோட சண்டை போட்டா ஆஸ்திரேலியா மட்டும் தன் நாட்டு விலங்குகளோடயே கடந்த இரண்டு நூற்றாண்டா சண்டை போட்டுட்டு இருக்காங்க.அப்படி ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் பெரிய தலைவலியா இருக்கிறது ஒரு அழகான வீட்டு விலங்கு அப்படினு நாம நினைச்சுட்டு இருக்குற முயல். இந்த முயல் ஆஸ்திரேலியாவிலே பூர்விகமா இல்லாம வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒன்னு.இன்னைக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள உணவுப்பொருட்கள தின்னு நஷ்டத்த ஏற்படுத்திட்டு இருக்கு.பல நோய்களையும் கொடுத்துருக்கு
1859ஆம் ஆஸ்திரேலியா வாழ்ந்தா தாமஸ் ஆஸ்டின்கிற ப்ரிட்டிஷ்கார்ர் போரடிக்கிதே பொழப்பு இல்லயேனு வேட்டையாடலாம்னு 24 முயல்கள இங்கிலாந்துல இருந்து கொண்டு வந்து கிறிஸ்மஸ் அன்னைக்கு தன்னோட தோட்டத்துக்குள்ள அவுத்து விடுறாப்டி.எல்லாத்தையும் வேட்டையாடிறலாம்னு நினைக்கிறாப்டி.ஆனா முடியல.அதோட தன்னோட தோட்டத்துலயே அதை விட்டுர்றாப்ள.அது அப்படியே குட்டிபோட்டு பெருக ஆரம்பிக்குது.ஒரு ஏழு வருஷத்துல 14000 முயல்களா பெருகிருது.ஒரு இடத்துல இல்லாத ஒரு விலங்க புது இடத்துல இருந்து கொண்டு வந்து விட்டோம்னா வந்த இடத்துல அதுக்கு எதிரிகளே இருக்காது.எதிரிகளே இல்லைனா அதோட இனப்பெருக்கத்தத கட்டுப்படுத்தவே முடியாது.இதுதான் நடந்தது
இந்த முயல்கள் வயல்கள பூரா நாசம் பண்ண ஆரம்பிக்கிது.எல்லாத்தையும் தின்னு தீர்க்குது.இது எந்த அளவுக்கு மோசம்னா ஒரு கட்டத்துல மேற்கு ஆஸ்திரேலியாவையே 2000 மைல் நீளத்துக்கு வேலி போட்டு முயல் மத்த ஸ்டேட்ஸ்ககு பரவாம தடுக்குற அளவுக்கு
முயல்க்கு எதிரான போர அரசு அறிவிக்கிது.வேட்டைல இறங்குறாங்க..முயல் புத்துகள்ல வெடிமருந்த வான்வழியா கொட்டி வெடிக்க வைக்கிறது, புல்டோசர வச்சு பொந்துகள அழிக்கிறது,வேட்டையாடுறது போய் கடைசில 1950கள்ல Myxomaங்கிற வைரஸ் முயல்கள்ல செலுத்தி நோய் வரவச்சு கொல்றாங்க.ஆனா ரெண்டு மூணு வருஷங்கள்ல முயல்களும் அந்த வைரஸ தாங்குற அளவு இம்மியூனிட்டி பவர் வந்துருது.மறுபடி பெருக ஆரம்பிக்கிது.1995 வேற ஒரு biological weapon Kalissaங்கிற வைரஸ மறுபடி கண்டுபிடிச்சு அதோட பாப்புலேஷன கன்ட்ரோல்ல வச்சுருக்காங்க.இன்னும் 300 மில்லியன் முயல்கள் ஆஸ்திரேலியாவுல இருக்கு.இந்த வைரஸ்னால முயல்கறி அங்க சாப்பிடுறதில்ல.வேக்ஸின் போட்ட வீட்டு முயல்கள் மட்டும் கிடைக்கும்.அதுவும் காஸ்ட்லி.
முயலோட சண்டை போட்டுக்கிட்டு இருக்குறப்பவே 1920கள்ல முதல் உலகப்போர் முடிஞ்சு நாடு திரும்புன வீர்ர்களுக்கு மேற்கு ஆஸ்திரேலியாவுல நிலங்கள கொடுத்து விவாசயம் பண்ணி பொழச்சுக்கனு அரசு சொல்லுது.1929ல கோதுமைக்கு தட்டுப்பாடு வர விவசாயிகள அதிக அளவு கோதுமை பயிரிட சொல்லுது.1932ல கோதுமையோட விலை கடும் வீழ்ச்சி அடையுது.அதனால விவசாயிகள் கோதுமைய அறுவடை பண்ணமாட்டோம் மானியம் வேணும்னு போராட்டம் பண்றாங்க.அந்த டைம்ல இரை கிடைக்காத ஈமு கோழிகள் மேற்கு ஆஸ்திரேலியால நிறைய சாப்பாடு இருக்குனு இடம் பெயருது.ஒரு 20 ஆயிரம் ஈமு கோழிகள் மேற்கு பகுதிக்கு வந்துருது
வந்து வயல்கள நாசம் பண்ண ஆரம்பிக்கிது.உடனே முன்னாள் வீர்ர்களான விவசாயிகள் நாட்டோட பாதுகாப்பு அமைச்சர்ட்ட முறையிடுறாங்க.அப்ப ஈமுக்கோழிக்கு எதிரான போர அரசு அறிவிக்கிது The great Emu War had begun.இராணுவ வீர்ர்கள மிஷின்கன்னோட வயல்களுக்கு அனுப்பி ஈமு கோழிய சுட்டு கொல்றது.அது அணைல தெர்மோக்கோல் போட்டு மூடுற ஐடியா மாதிரி பெயிலியர் ஆயிருது.ஒவ்வொன்னையும் தேடித்தேடி சுட முடியல.அதனால விவசாயிகளுக்கே வெடி மருந்து துப்பாக்கிலாம் கொடுத்து நீங்களே கொல்லுங்க.கொல்றவங்களுக்கு சன்மானம் தர்றோம்னு அறிவிக்கிது அரசு.இது ஓரளவு ஒர்க் ஆகி ஈமு பாப்புலேஷன் குறையிது. தற்போது கணக்குப்படி 700 ஆயிரம் ஈமு இன்னும் இருக்கு.
அதே காலகட்டத்துல இன்னொரு பெரிய முட்டாள்தனத்த ஆஸ்திரேலியா பண்ணுது. கரும்பு விவசாயிகள் தங்களோட கரும்பு பயிர வண்டுகள் தாக்கி அழிக்கிது.இது அவங்களுக்கு பெரிய தலைவலிய கொடுக்குது. இதை தடுக்க என்ன பண்ணலாம்னு யோசிக்கிறப்ப சவுத் அமெரிக்கால இந்த வண்டுகள தின்னு அழிக்க Cane toad ( தேரை) பயன்படுறத தெரிஞ்சுக்கிறாங்க
உடனே சரியா அதை பத்தி தெரிஞ்சுக்காம ஒரு வெறும் நூறு toads ஹவாய்ல இருந்து இறக்குமதி பண்ணி வயல்ல விடுறாங்க.விட்டப்புறம்தான் யோசிக்கிறாங்க வண்டு கரும்போட மேல் பகுதில இருக்கு Toad தரைல இருக்கு.தவ்வி புடிக்க முடியலைங்கிறத.அதோட மட்டுமில்லாம இந்த Toads அதிக அளவுல இனப்பெருக்கம் பண்ணக்கூடியது.கொடிய விஷம் தோள்பரப்புல வச்சுருக்க்கும்.ஒரே நேரத்துல 30000 முட்டைகள் இடும்.அதனால இதோட பாப்புலேஷன் கொஞ்ச வருஷத்துலயே பல மில்லியனுக்கு போயிருச்சு
வண்டுவ இது சாப்பிடும்னு கொண்டு வந்தா இதை சாப்பிடுற ஆஸ்திரேலியாவோட ஒரிஜினல் விலங்குகளான நன்னீர் முதலைகள்லாம் சாக ஆரம்பிக்கிது.இது பல உயிரினங்கள தன்னோட விஷத்தால மொத்தமா அழிச்சு ஆஸ்திரேலியாவோட மொத்த eco systemத்தயே மாத்திருச்சு.இது மட்டுமல்லாம தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைஞ்சுட்டே வருது.
முதல்ல ஆண்டுக்கு பத்து கிலோ மீட்டர் டிராவல் பண்ணது இப்போ அம்பது கிலோ மீட்டர் டிராவல் பண்ணி மொத்த ஆஸ்திரேலியாவுலயும் பரவிருச்சு.சின்னதா இருந்த toad இப்ப இரண்டே முக்கால் கிலோ அளவுக்கு பெரிசா வளர்ற மாதிரி ஆகிப்போச்சு. கிடைக்கிற எல்லாத்தையும் தின்னு அதிக அளவுல இனப்பெருக்கம் பண்ணிட்டே இருக்கு.100 ல இருந்து இப்போ 200 மில்லியன் பாப்புலேஷனுக்கு வந்துருக்கு.போன நூற்றாண்டுக்கு முன்னாடி வரை அங்க ஒரு cane toad கூட இல்ல.
ஆஸ்திரேலியாவுக்கு இப்போதும் இன்னொரு தலைவலியா இருக்குறது wild camel. இதுவும் ஆஸ்திரேலியாவோட விலங்கு இல்ல.1840ல இந்தியால இருந்து பிரிட்டிஷ்காரங்களால கொண்டு போனது.இப்போதைக்கு wild camel அதிகம் உள்ளது வளைகுடா நாடுகள் இல்ல ஆஸ்திரேலியாதான்.டிரான்ஸ்போர்டேஷனுக்காக ஒட்டகத்த கொண்டு போய் பயன்படுத்துனாங்க.அப்போ அது நல்லா பயன்பட்டுச்சு
ஆனா ஆட்டோமொபைல் வருகைக்கு பின்னாடி அதோட பயன்பாடு குறைஞ்சு அதை பராமரிக்கிறது பெரும்சுமையா மாறிடுச்சு.பல லிட்டர் தண்ணி தேவைப்பட ஆரம்பிச்சிது.அதுவும் 1900 கள்ல 10000 ஆ இருந்த அதோட பாப்புலேஷன் இப்போ ஒரு மில்லியனா ஆகிப்போச்சு.தண்ணிய தேடி நகரங்களுக்கு வந்து வீட்ட உடைக்கிற அளவுக்கு ஆனதால ஹெலிகாப்டர்ல ஸ்பெனப்பர வச்சு ஒட்டகங்கள சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு 2020ல உத்தரவு பிறப்பிச்சது.10000 ஒட்டகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டது
அடுத்து 🐁 Mice attack. Wild cat attack. இப்படி சொல்லிட்டே போகலாம்.ஆஸ்திரேலியா எப்போதும் எதுனா விலங்கு பூச்சியோடயே சண்டை போட்டுட்டு இருப்பாங்க.கேரளால தெருநாய ஒழிக்க தீர்மானம் போட்டாங்க.நம்மூர்லயும் தொல்லைகள் அதிகமாயிட்டே போகுது.வில்ங்கு ஆர்வலர்கள் விடலைனாலும் இதை ஆஸ்திரேலியா மாதிரி லேட் பண்ணாம தடுத்தே ஆகணும்.

Loading suggestions...