25 Tweets 7 reads Jan 03, 2024
இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த சமூக போராளி, சீர்திருத்தவாதி, பகுத்தறிவாளர், பரந்த மனப்பான்மையாளர் தந்தை பெரியார் அவர்கள். அவர் மீது சேற்றை வாரி இறைக்கும் நபர்களுக்காக மட்டுமல்ல அவர் மீது சேற்றை வாரி இறைப்பதற்கு காரணமான நபர்களுக்காகவும் இந்த பதிவை இடுகிறேன்.
மக்களின் நலன் சாராது ஒரு சிறு கூட்டத்தின் பிழைப்புக்காக இவ்வளவு நாடு கட்டமைக்கப்பட்டிருக்கும் அவலத்தை கேள்வி கேட்டார் பெரும்பான்மை மக்கள் ஒரு சிறு கூட்டத்திற்கு அடிமை வேலை செய்வதற்காகவே பிறந்ததா என்று அவர் கேட்டார் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் அனைவருக்கும் உரிமை ஏற்பட
இட ஒதுக்கீடை பற்றி பேசினார். சமத்துவம் என்பது பாலிட அடிப்படையில் கூட மறுக்கப்படக் கூடாது என்பதற்காக பெண் சுதந்திரத்தை பற்றி பேசினார். தன்னைவிட மேலாக பார்ப்பனரை எண்ணாத பெரியார் அவர்கள் தன்னைவிட கீழாக யாரையும் நினைத்ததில்லை.
எல்லா பிரச்சனைகளுக்கும் அறிவியல் துணை கொண்டு அறிவுபூர்வமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துச் சொன்னார் கற்பனையில் வரும் கடவுளை விட உன் கண் முன் இருக்கும் மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள் என்று கூறினார்
ஆராய்ந்து அறிந்த அறிவியல் மட்டுமே இந்த உலகத்தின் எதிர்காலம் என்றும் கற்பனை கதாபாத்திரங்கள் மக்களின் அழிவுக்கான பாதை என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார் இன்று நாம் வாழும் சூழல் போல 100 ஆண்டுகளுக்கு முன்பு நம் சமுதாய சூழல் இருந்திருக்காது ஆனால் அன்றே இதை குறித்து எல்லாம் பேசியவர்
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே தன் வாழ்நாள் அலட்சியமாக வாழ்ந்து மறைந்தார் ஆனால் இன்றைய காலகட்டத்தில் இங்கு பல பேர் அவர் குறித்து தவறான பிரச்சாரங்களை பரப்பி கொண்டே இருக்கிறார்கள் அவர்களிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் சில
முதல் கேள்வி பார்ப்பனருக்கும் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமான கல்வியை இன்று சாதாரண மனிதர்களிடமும் கொண்டு சேர்த்த பெரியார் எந்த வகையில் உங்களுக்கு எதிரி ஆகி போனார்
இரண்டாவது கேள்வி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தி இட ஒதுக்கீடை பெற்று தந்த அவர் எவ்வாறு துரோகியாகி போனார் மூன்றாவது கேள்வி தனக்கு தன் குடும்பத்திற்கு ஒரு நியாயம் சமுதாயத்திற்கு ஒரு நியாயம் என்று அவர் வாழ்ந்தவர் இல்லை இந்த சமூகத்தில் எந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும்
என்று நினைத்தாரோ அதை அவர் தனது குடும்பத்திலிருந்து ஆரம்பித்தார் கடவுள் நம்பிக்கை ஆகட்டும் மத சடங்குகள் ஆகட்டும் தாலி தாய்மை பெண்ணுரிமை கற்பு இதுபோன்ற அனைத்தையும் தன் குடும்பத்திலிருந்து அகற்றுவதன் மூலம் அவரது புரட்சியை துவங்கினார் அவ்வாறு இருக்க அவர் நீங்கள் போலியாக பிம்பப்
படுத்துவது ஏன் நான்காவது கேள்வி அவரது இந்த நிலைப்பாட்டினால் பாதிக்கப்பட்ட தன்னை உயர் சாதி என்று நினைத்துக் கொள்ளும் மக்கள் அவரை எதிர்க்கலாம் ஆனால் அவர் யாருக்காக உழைத்தாரோ அந்த மக்களே அவரை கீழ்த்தரமாக பேசுவது ஏன்
அவர் குறித்து நீங்கள் பேசும் விஷயங்களை உண்மை தன்மையை என்றாவது ஒரு நாளாவது நீங்கள் ஆராய்ந்து பார்த்ததுண்டா அவர் எழுத்தில் அல்லது பேச்சில் என்றாவது நீங்கள் குறை கண்டதுண்டா
பெரியார் சாதியை ஒழித்து விட்டாரா என்று கேள்வி கேட்பவர்களிடம் ஒரு கேள்வி சாதி ஒழிய வேண்டாம் என்று என்றைக்காவது பெரியார் கூறியிருக்கிறாரா? பெரியாரின் வாழ்வா லட்சியமே சமத்துவம் தான் அந்த சமத்துவத்தை நோக்கி நகர தடையாக இருக்கும் சாதியை அவர் முற்றிலுமாக எதிர்த்தார்
அவர் எதிர்த்து போராடிய கூட இன்று வரை சாதி கொடுமை இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பெரியாரா இல்லை பெரியாரை எதிரியாக காட்டும் நீங்களா சாதி என்னும் சாக்கடையை அவர் என்று விரும்பியதில்லை ஆனால் சாதியை அடையாளமாக போட்டுக் கொள்ளும் நீங்கள் பெரியாரை விமர்சிக்க தகுதியானவர்களா
சாதியையோ எந்த சம்பிரதாயத்தையோ விரும்பாத ஒரு மனிதர் எப்படி உங்களுக்கு எதிரி ஆகிப் போனார் மொழி அடிப்படையில் நீங்கள் அவரை எதிரி என்று கட்டமைப்பது மிகவும் கீழ்த்தரமான செயல் பிறப்பால் அவருக்கு ஒரு மொழி இருக்கிறது என்றால் அந்த மொழிக்காக நீங்கள் அவரை ஒடுக்குவீர்கள் என்றால்
நீங்கள் யார் என்பதை ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் சமுதாயத்திற்கு தீங்கான சிந்தனைகளை உடைய மனிதர்கள் மனித இனத்திற்கு எதிரிகள் தனக்கு வலிப்பது போலவே பிறருக்கும் வழிக்கும் என்று நினைக்கும் சுபாவம் கொண்ட மனிதர்கள் இங்கே இந்த மண்ணுக்கு தேவையான மனிதர்கள் அப்படி பார்த்தால்
பெரியாரை விட இந்த மண்ணை நேசித்த மனிதர் வேறு யாரும் இருக்க முடியாது
பெரியார் மீது சேற்றை வாரி இருக்க காரணமாக இருக்கும் போலி பெரியாரிஸ்டுகளுக்கு சில வார்த்தைகள் கருத்தியலாக எதிர்க்க முடியாத பெரியார் எனும் பேராளுமையை இன்று தெருவில் போவர் ஒருவர் எல்லாம் நிந்திக்கும் அளவிற்கு கொண்டு சென்றது நீங்கள் தான்
பெரியாரின் பெயரை சொல்லி பகுத்தறிவு என்ற பெயரால் பெண்களிடம் பாலியல் சுரண்டல் நடத்துவதற்கு ஒரு சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு பெயர் பெண் சுதந்திரமா இதை பெரியார் வரவேற்றாரா பெரியார் பேசிய பெண்ணியத்திற்கும் இங்கு நீங்கள் செயல்படுத்தி கொண்டிருக்கும் பெண்ணியத்திற்கும்
உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா பெண்களை சுயமாக முடிவெடுக்க சொன்னார் பெரியார் ஆனால் அவ்வாறு சுயமாக முடிவெடுத்து சுதந்திரத்தை அடையும் பெண்களை பாலியல் சுரண்டலுக்காக அணுகும் நீங்கள் பெரியாரியவாதிகளா
சமத்துவம் ஏற்பட வேண்டும் என்று கடைசி வரைக்கும் போராடிய பெயரையும் முகத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் போலி பெரியாரிஸ்டுகள் இன்று வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்த நியாயம் என்ன தனக்குள் இருக்கும் சாதிவெறியை மறைப்பதற்கு பெயர்தான் பெரியாரிய கொள்கையா
சுயமரியாதை இயக்கம் 100 வருட பழமையான இயக்கம் அந்த இயக்கம் அதன் கொள்கை தமிழ்நாடு தாண்டி செல்லாமல் இருப்பது பெரியாருக்கு செய்யும் துரோகம் அல்லவா சாதி மத பாலிட பாகுபாட்டை விட்டுவிட்டு பெரியார் கூறிய வழியில் பயணிப்பது மட்டுமே சரியான பகுத்தறிவாக திராவிட அரசியலாக இருக்கும்
அதை விட்டு பிழைப்புக்காக செய்யும் எந்த அரசியலுக்குப் பின்பும் தயவு செய்து பெரியாரை பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் ஏனென்றால் நீங்கள் உண்மையான பெரியார் வாதிகள் கிடையாது அவர்கள் எதிரிகள் என்றால் நீங்கள் துரோகிகள் பெரியார் என்னும் பேராளுமையை சில காலமாக சாதிவெறி மதவெறி இடவெறி கட்சிகள்
மும்முனை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு தாக்குதல் நடத்துவதால் அவர்களுக்கு பலன் உண்டு, ஆனால் தமிழகத்தை விட்டு பெரியாரை ஒழிப்பதால் யாருக்கு நஷ்டம் என்று இனிமேலாவது புரிந்து செயல்படுங்கள். நன்றி

Loading suggestions...