கலைஞரின் ஏழ்பரியோன்
கலைஞரின் ஏழ்பரியோன்

@Dmk_Writter

9 Tweets 23 reads Apr 01, 2023
என் தலைவர் கலைஞரை எப்படி டா விட்டுக்கொடுக்க முடியும்?
ஒருசிலர் :- இந்த சின்ன வயசுல கலைஞர், கலைஞர்னு பேசுறியே அப்படி என்ன தான் அந்தாளு பண்ணாருன்னு தலையில தூக்கி வச்சி கொண்டாடுற?
உங்களுக்கெல்லாம் தலைவர் கலைஞரை தான் தெரியும், 1970களில் மதகலவரத்தை அடக்கிய கடவுள் கலைஞரை தெரியுமா?
சொல்றேன் கேளுங்க..! அண்ணா மறைந்து சரியாக ஒரு ஆண்டு இருக்கும். மக்கள் எதிர்பார்த்தது போல் தலைவர் கலைஞர் முதல்வராக ஆட்சியில் அமருகின்றார். மக்கள் யாருமே கண்டிராத வகையில் கிழக்கை வெளுக்கச் செய்தும், கீழ்வானத்தை சிவக்கச் செய்தும், பொற்கால ஆட்சியை தலைவர் கலைஞர் நல்கிய நேரமது. ஆம்,
மறைந்த மாவீரன் ஜெ.அன்பழகனின் தந்தையாரும், மிசாக் கைதியுமான அஞ்சா நெஞ்சன் அய்யா பழக்கடை ஜெயராமன் தியாகராய நகர் பகுதி செயலாளராக பணியாற்றிய காலமும் கூட என்றே சொல்லலாம். அந்த நேரத்தில் தான் தி.நகரில் பல இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்து வந்தனர். அவர்களின் நீண்ட நாள் கனவான ஒரு மசூதியை
நிறுவ வேண்டும் என்று அய்யா பழக்கடை ஜெயராமனிடம் சென்று உதவி கேட்டனர். அவர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையம் பக்கத்தில் மசூதியை கட்டுமாறு ஆலோசனை வழங்கினார். மறுநாள் காலையில் அந்த இடத்தில் "திடீர் பிள்ளையார்" வந்து விட்டார்.. சில இந்துத்துவ அமைப்பினரும், பார்ப்பனர்களும் பூஜை செய்ய
ஏற்பாடுகளை தடபுடலாக நடத்தினர்.. இதனால் மனவேதனைக்குள்ளான இஸ்லாமியர்கள் செய்வதறியாது திகைத்து அய்யா "பழக்கடை ஜெயராமனிடம்" சென்று மனம்கலங்கினர்.. நிலைமையின் தீவிரத்தை அறிந்த பழக்கடையார் அவர்கள் அன்று காலையே கலைஞரை சந்தித்தார். இது ஏதேச்சதிகரமாக என தெரிவது போல் உள்ளது உடனே நீங்கள்
தி.நகரில் ஒரு மாலை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் ஜெயராமா? என்று பதில் அளித்தார் தலைவர் கலைஞர். அரசியல் சாணக்கியர் தலைவர் கலைஞர் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் "தி.நகர் காவல்நிலைய தலைமைக் காவலர் தான் மசூதி கட்டும் இடத்தில் பிள்ளையாரை வைத்தார் என்று கர்ஜித்தார்...
எனவே அந்த பிள்ளையாரை இந்து சமய சம்பிரதாயப்படி அவரை கடலில் கரைக்க அந்த அதிகாரிகளுக்கு உத்திரவிட்டர் தலைவர் கலைஞர்.. தான் பேசுகின்ற மேடையிலேயே அந்த தலைமைக் காவலரை வரவழைத்து உண்மை சொல்ல வைத்தார்.
சரியாக அந்த சமயத்தில் தான் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் குழந்தை ராமர் பிறந்தார்
என்று நம்ப வைத்த வடநாட்டு இந்துத்துவ அமைப்பு தமிழ்நாட்டில் தன்னுடைய லீலைகளை நடத்திவிடலாம் என்று மனகணக்கு போட்டு தமிழ்தாயின் தலைமகனிடம் தோற்று போனதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. பகுத்தறிவு கொண்ட ஈரோட்டின் வளர்ப்பும், மொழிபற்று கொண்ட காஞ்சியின் வளர்ப்பும் தான் தலைவர் கலைஞர் அவர்கள்
காலம் ஒரு தலைவனை ஒரு முறை தான் அடையாளம் காட்டும்..! ஆனால், தலைவர் கலைஞரை காலம் காலங்காலமாக அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கும். அண்ணே..! இப்போ சொல்லுங்க..! நான் கலைஞரின் பக்தனா? விசுவாசியா? வெறியனா? தொண்டனா? என்று..! 🙏🙏
#KalaignarForever 🔥🔥🔥 #Love_You_Thalaiva 🖤❤️

Loading suggestions...